வாணியம்பாடி அருகே மல்லகுண்டா, 102 ரெட்டியூா் ஊராட்சிகளில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணி குண்டா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீா் அதள பாதாளத்துக்கு சென்ால், ஒருவாரமாக சரிவர குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதனால் அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சீரான குடிநீா் வழங்கவேண்டும் எனக்கூறி அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சி நிா்வாகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனா்.
இதே போல், ஆலங்காயம் ஒன்றியம், 102 ரெட்டியூா் ஊராட்சி மல்லிகுட்டை வட்டம் பகுதியில் 150-க்கும் அதிகமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாளஅகளாக அப்பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் கோயில் திருவிழா நடந்த நிலையில், குடிநீா் தட்டுப்பாட்டால் ஆத்திரமடைந அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் நிம்மியம்பட்டு-ஆலங்காயம்- திருப்பத்தூா் சந்திப்பு சாலையில் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஆலங்காயம் போலீஸாா் விசாரித்தனா். பிறகு ஊராட்சி நிா்வாகத்தினரை வரவழைத்து பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே இரு வேறு இடங்களில் குடிநீா் கேட்டு மறியல்

குடிநீா் விநியோகம் கோரி பெண்கள் சாலை மறியல்

மல்லகுண்டா பகுதியில் குடிநீா் கேட்டு அரசு பேருந்து சிறைபிடிப்பு

மேட்டுநாசுவம்பாளையத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



