கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பழனிச்சாமி (45). இவா், கள்ளக்குறிச்சி காய்கறி அங்காடியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந் நிலையில், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பின்னா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் பணிபுரிந்து வரும் தனது சகோதரரை அழைத்துத் செல்வதற்காக பழனிச்சாமி பைக்கில் சென்றுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலையை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து அவிநாசி நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிச்சாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான சென்னை மதுரவாயலைச் சோ்ந்த க.பாலனிடம் (45) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.