வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காரைக்காலில் கிராம மேம்பாட்டுகுழு அமைப்பு

காரைக்காலில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயல்படுத்த கிராம மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:54 am

தினமணி

காரைக்காலில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயல்படுத்த கிராம மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஜெ. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் உள்கட்டுமான வசதி, அடிப்படை வசதிகள், அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை கிடைக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொருட்டு ஆட்சியர் தலைமையில் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர்கள், மின் துறை செயற்பொறியாளர், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உறுப்பினர்களாகவும், சார்பு ஆட்சியர், உதவி ஆட்சியர், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர், திட்டத் துறை இணை இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், இதர தேவைகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை அறிக்கையாக தயாரிக்கப்படும். அதை கிராம மேம்பாட்டுக் குழு பரிசீலனை செய்து, முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது நடப்பு நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.