எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கைதானோருக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம்

புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இருவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:14 pm

தினமணி

புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இருவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இச்சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலர் எம்.குமரன் தலைமை வகித்தார். செயலர் ஏ.கண்ணன் முன்னிலை வகித்தார்.

தீர்மானங்கள்:

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை வழக்குரைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. மாணவியை பலாத்காரம் செய்தோருக்கு உரிய தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும்.  பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தையும் அரசு வழங்க வேண்டும். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஆதரவாக, புதுச்சேரி வழக்குரைஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.