பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக்கோரி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரியில், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மத்திய, மாநில அரசுகள் தடுக்கக்கோரி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர்கள் சங்கத் தலைவர் முருகையன், மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், உதவி தலைவர் கொஞ்சியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். சினிமாவில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைத் தடை செய்ய வேண்டும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பெண்களுக்கு எதிராக குற்றச் செயலில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...