தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

19-வது சர்வதேச யோகா திருவிழா தொடக்கம்

புதுச்சேரியில் 19-வது சர்வதேச யோகா திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:17 pm

தினமணி

புதுச்சேரியில் 19-வது சர்வதேச யோகா திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்து, முதல்வர் என்.ரங்கசாமி பேசியது:

  நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு யோகாசனம் மிக முக்கியம். யோகாசனம் கற்றுக் கொண்டால் உடல் சீராக இருக்கும்.

பல சித்தர்கள் வாழ்ந்த பூமி புதுச்சேரி. இங்கு யோகாசனம் கற்க பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர். அதனால், புதுச்சேரியில் தொடர்ந்து 19-வது ஆண்டாக இந்த யோகா திருவிழா நடத்தப்படுகிறது.

நாட்டிலேயே சிறிய மாநிலமாக இருந்தாலும், சுற்றுலாவில் சிறந்து விளங்குகிறது. மாநிலத்தின் சொந்த வருவாயை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்காக இதுபோன்ற திருவிழாக்களை நடத்துவதன் மூலம், அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

இதற்காக, பண்டைய கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 72 கட்டடங்களை பழைமையானவை என அறிவித்து, அவற்றைப் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

தானே புயலில் சீர்குலைந்த அழகை மீட்க, மரம் நடும் திட்டத்தைத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலைகளைச் சீராக்கி அழகுபடுத்த, பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுற்றுலாத்துறை மூலம் மாநிலத்தின் அதிகபட்ச வருவாய் ஈட்டப்பட வேண்டுமென்பதில், அத்துறையின் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தத் தேவையான பணிகளில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.

அமைச்சர் பெ.ராஜவேலு, சுற்றுலா மேம்பாட்டுத்துறை தலைவர் வையாபுரி மணிகண்டன், வீட்டுவசதி வாரியத் தலைவர் வெங்கடேசன், சுற்றுலாத்துறைச் செயலர் டபிள்யு.வி.ஆர்.மூர்த்தி, இயக்குநர் ஏ.எஸ்.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வரும் 7-ம் தேதி வரை இந்த யோகா திருவிழா நடைபெறுகிறது. மகாத்மாகாந்தி சாலை சுப்புலட்சுமிமஹால், கடற்கரை காந்தி திடல் ஆகிய இடங்களில் தினசரி காலை முதல் இரவு வரை யோகாசனப் பயிற்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். ஜனவரி 7-ம் தேதி மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.