கைதானோருக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம்
புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இருவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான இருவருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இச்சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுச் செயலர் எம்.குமரன் தலைமை வகித்தார். செயலர் ஏ.கண்ணன் முன்னிலை வகித்தார்.
தீர்மானங்கள்:
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை வழக்குரைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. மாணவியை பலாத்காரம் செய்தோருக்கு உரிய தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தையும் அரசு வழங்க வேண்டும். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஆதரவாக, புதுச்சேரி வழக்குரைஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...