பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

புதுவைக்குத் தனி மாநில அந்தஸ்து: தி.மு.க. முழு ஒத்துழைப்பு தரும்

புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அதன் மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்

Updated On :13 மே 2013, 12:38 am IST

புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அதன் மாநில அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

 புதுச்சேரி மாநிலம் முழு அதிகாரம் பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் கருத்தாகும். புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருப்பதால், பல்வேறு சூழலில் வளர்ச்சிப் பணிகளில் தடை ஏற்படுகிறது. எனவே, தற்போதுள்ள நிலையயிலிருந்து மாறி, முழு அதிகாரம் பெற்ற மாநிலமாக வேண்டும்.

 மாநில அந்தஸ்து தேவை என, 1996-ஆம் ஆண்டு இருந்த தி.மு.க. ஆட்சி முதல் தற்போதைய முதல்வர் வரை பல்வேறு அரசுகளாலும், இயக்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்குப் பல முறை அனுப்பப்பட்டுள்ளது.

 தேர்தல்கள் மூலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் கூடும் பேரவைக்கு அதிகாரம் இல்லாமல், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாக புதுச்சேரி அரசு இருப்பதுதான் உண்மை.

30 சட்டப்பேரவை பிரதிநிதிகளால் வைக்கப்படும் மக்கள் கோரிக்கைகளுக்கும், விருப்பங்களுக்கும் மாறாக, மத்திய அரசின் ஒரு சார்பு நிலை செயலரே முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டிருப்பது வெட்கக்கேடானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மக்கள் பணி செய்ய முடியாமல், அதிகார வர்கத்தின் பிடியில் இருப்பது என்பதும் ஒரு காலனி ஆதிக்க முறைதான்.

 இந்த நிலை மாற 1996-2000-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன், அனைத்து கட்சியின் பிரதிநிதிகளையும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தில்லி அழைத்துச் சென்றார்.

மாநில அந்தஸ்து கோரி, மத்திய அரசை அணுகி, அப்போதைய பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் தொடர் நடவடிக்கைகளை எடுக்காமல், அடுத்து வந்த காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் அரசுகள் இருந்துவிட்டன.

எனவே, மாநில அந்தஸ்து பெறுவது தொடர்வான கூட்டத்தை, அரசு சார்பில் நடத்த முதல்வர் என்.ரங்கசாமி முன்வர வேண்டும். அப்போதுதான், கட்சி பாகுபாடின்றி, கூட்டணி எல்லைகளைக் கடந்து, அனைவரும் புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதுணையாக இருக்க நேரிடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.