நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

20-ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர்கள் முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு முடக்க முயற்சிப்பதாகக் கூறி, வரும் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Updated On :13 மே 2013, 12:24 am IST

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு முடக்க முயற்சிப்பதாகக் கூறி, வரும் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

 புதுச்சேரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பாகூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசியக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேசியச் செயலர் அ.ராமமூர்த்தி விளக்கினார்.

தீர்மானங்கள்: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முடக்க முயலும் புதுச்சேரி அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் வேலை வழங்க வலியுறுத்தியும்,

வேலை தராத நாட்களுக்கு அரை நாள் ஊதியம் வழங்கக் கோரியும் வரும் 20-ஆம் தேதி புதுச்சேரியில் இரு மையங்களிலும், காரைக்காலில் ஒரு மையத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

 இரு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் விவசாயத் தொழிலாளர் நலச்சங்கத்தை மீண்டும் செயல்படுத்துவதோடு, அடையாள அட்டை வழங்கி, காப்பீட்டுத் திட்டத்தையும் அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும்.

 காரைக்கால் பகுதியில் காவிரியில் நீரின்றி விவசாயம் பொய்த்துப் போனதால், வேலையின்றித் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

 இலவச மனைப்பட்டா, வீடு கட்ட மானியம், கால்நடைத்துறை மூலம் மானியத்துடன் மாடுகள், ஆடுகள், கோழிகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 மேலும், ஜூலை 16-ஆம் தேதி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் நடத்தும் தேசிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சங்க பொதுச்செயலர் கா.பாலகிருஷ்ணன், மாநில துணை பொதுச்செயலர் பா.பெ.விஜயபாலன், செயலர்கள் ஆர்.அருள், மு.ஆதிமூலம், துணைத் தலைவர்கள் பு.ராஜலட்சுமி, எஸ்.ராஜலட்சுமி, மு.ஏகாம்பரம், பொருளாளர் எஸ்.வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.