உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சுற்றுலா சாகச ஓட்டம் தொடக்கம்

புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹெளஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Published On :

புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹெளஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக ஹாஷ் ஓட்டம் நடத்தப்படுகிறது. ஹாஷ் ரன் எனப்படும் ஓட்டம் கடந்த 1938-ம் ஆண்டு மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில நடத்தப்பட்டு தற்போது முதன்முறையாக புதுச்சேரியில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சுறறுலாத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு கூறியதாவது: புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், அதிக வெளிநாட்டவரை ஈர்க்கும்

வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் பர்வீன் ஹாலிடேஸ் நிறுவனத்தினருடன் இணைந்து சுற்றுலா துறை இதை நடத்துகிறது. இதற்காக மொத்தம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கொரியா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என இதில் மொத்தம் 3000 பேர் பங்கேற்கின்றனர். இதன் நிறைவு நிகழ்ச்சி லேபாண்டி ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றார்.

சென்னை ஹாஷ் அமைப்பு நிர்வாகி சசி சர்மா கூறியதாவது: ஹாஷ் ஓட்டத்தில் மொத்தம் 6 வகைகளில் நடத்தப்படுகிறது. குறைந்த தூரமாக 3 முதல் 5 கி.மீ. தூரமும், நீண்ட தூரமாக 26 கி.மீ. தூரமும் சாகச ஓட்டமாக நடத்தப்படும்.

செண்பகா ஓட்டல், லே பாண்டியில் இவை நடத்தப்படும் என்றார்.

ஓட்டம் தொடக்கம்: இதன் துவக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை பிற்பகல் புதுச்சேரி செண்பகா ஓட்டலில் இருந்து ஹாஷ் ஓட்டம் தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.