காரைக்கால் நகரில் முக்கியமான போக்குவரத்து சாலைகள், கடற்கரை என மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளனர்.
காரைக்கால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது. குறிப்பாக பாரதியார் சாலை, காமராஜர் சாலை, திருநள்ளாறு சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகம்.
சிலர் போக்குவரத்து சிக்னலை கண்டுகொள்ளாமல் வேகமாகச் சென்று விபத்து ஏற்படுத்துகின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? என்பதைக் கண்டறிவதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்படுகிறது. திருநள்ளாறு கோயிலில் உள் பகுதி, வெளிப் பகுதி, நளன் குளம் சுற்றுவட்டாரம் என 35-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் ஏதாவது குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் கேமரா பதிவுகளைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணமுடிகிறது. காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர்களாக இருந்த ஸ்ரீகாந்த், ஆன்டோஅல்போன்ஸ் ஆகியோர் காரைக்காலில் முதல்கட்டமாக 50 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்க திட்டம் வகுத்தனர். இவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசப் பொருளாளருமான எஸ்.ஏ.முகமது யூசுப் கூறியது: காரைக்காலில் புறவழிச் சாலைத் திட்டப் பணியை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் காரைக்கால் நகருக்குள் பயணித்தே நகரைக் கடக்க வேண்டியுள்ளது. இதனால் நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன.
விபத்தைத் தடுக்கவும், குற்றச் சம்பவங்களைக் கண்டறியவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் முக்கிய பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அகில இந்திய காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற முடிவு: ஜி.கே. வாசன் அறிவிப்பு!

காவல் நிலையத்தில் முதியவா் தீக்குளிப்பு

17 வயதுக்குள்பட்டோருக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி நிறைவு: அமைச்சா் பி.விஸ்வநாதன் பங்கேற்பு

இருப்புப் பாதை காவல் பிரிவில் 40% பற்றாக்குறை: டிஜிபிக்கு ரயில்வே பயனா் ஆலோசனைக் குழு கடிதம்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


