சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

"பாரதியார் சாலையில் வாகனங்களை நிறுத்த வசதி தேவை'

காரைக்கால் பாரதியார் சாலையில் வாகனங்கள் நிறுத்தவும், ஒருவழிப் பாதை விதியை மக்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

காரைக்கால் பாரதியார் சாலையில் வாகனங்கள் நிறுத்தவும், ஒருவழிப் பாதை விதியை மக்கள் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லெனின்பாரதி, உதவி ஆய்வாளர் முத்துசாமி ஆகியோரை காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சிப் பொருளாளர் அ.ராஜாமுகமது, தமுமுக நிர்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்தனர்.

காரைக்கால் நேரு வீதி, காமராஜர் சாலையில் ஒரு வழிப்பாதை அமலில் உள்ளது. இந்த ஒருவழிப் பாதையில் தடை செய்யப்பட்ட வாகனங்கள் (கனரக வாகனங்கள்) விதிகளை மீறி பயணிக்கிறது. இதனால், மிதிவண்டியில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, ஒருவழிப் பாதையில் போதிய விழிப்புணர்வு பலகைகள் வைத்து, போலீஸாரைக் கொண்டு வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். காரைக்கால் பாரதியார் சாலையில் அண்மையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் என்பதை குறிக்கும் வகையில் கோடுகள் போட வேண்டும்.

விபத்தைத் தடுக்கும் வகையிலான மின்னொளி ஸ்டிக்கர்கள் சாலையின் முக்கியப் பகுதியில் பதிக்க வேண்டும். விபத்துகளைக் கட்டுப்படுத்த இம்மாதிரி நடவடிக்கைகளை போக்குவரத்துக் காவல் நிர்வாகம் எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.