புதுவையில் வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சாலைகளுக்கான தேசிய பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படும் என்று தலைமை தொழிற்சாலைகள் ஆய்வாளர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் மார்ச் 4-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு தேசிய பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் தொழில் சார்ந்த நோய்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள், போட்டிகளை நடத்தி தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், புதுச்சேரி தலைமை தொழிற்சாலைகள் ஆய்வகம் இந்த ஆண்டும் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு பற்றிய கட்டுரைப் போட்டி, ஓவியம், கவிதைப் போட்டிகள், தொழிற்பயிற்சி நிலை மாணவர்களிடையே பாதுகாப்பு பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றை நடத்தும்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயிக்கு மீது தாக்குதல்: 6 போ் மீது வழக்கு
பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பாதிப்பு: 4.74 லட்சம் பேருக்கு தொடா் சிகிச்சை!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


