
அரசு அதிகாரிகளுக்கான செயலாக்க ஊக்குவிப்பு பயிற்சி நிறைவு
காரைக்காலில் உள்ள அரசுத் துறை உயரதிகாரிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
காரைக்காலில் உள்ள அரசுத் துறை உயரதிகாரிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
புதுச்சேரி திட்டம், ஆராய்ச்சித் துறையும், இந்திய பொது நிர்வாக பயிற்சி நிறுவன புதுச்சேரி பிரிவும் இணைந்து, அரசுத் துறைகளின் உயரதிகாரிகளுக்கு நிர்வாகத் திறனை மேம்படுத்துதலுக்கான பயிற்சியை ஒவ்வொரு ஆண்டும் அளிக்கிறது.
நிகழாண்டு, காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில், மாவட்டத்தின் முக்கிய அரசுத் துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்ற 3 நாள் முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இதில் மாவட்டத்தில் பலத் துறைகளைச் சேர்ந்த 35 அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிறைவுநாள் நிகழ்ச்சியில், கூடுதல் வேளாண் இயக்குநர் க.மதியழகன், அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் பி.பூங்காவனம் ஆகியோர் பயிற்சியின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
முகாம் தலைவர் ஆர்.ஆர்.தனபால், பயிற்சியின் நோக்கம் குறித்தும், அதிகாரிகள் பங்களிப்பு குறித்தும் பேசினார். புதுச்சேரி திட்டம், ஆராய்ச்சித் துறை இயக்குநர் ஜி.சாந்தமூர்த்தி பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழை வழங்கினார். திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை இணை இயக்குநர் சாந்தா வில்லியம்ஸ் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





