கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

என்.ஆர். காங்கிரஸ் அரசின் 5 ஆண்டு சாதனை மலர்கள் வெளியீடு

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு சார்பில்  5 ஆண்டுகள் சாதனை மலர் மூன்று வெளியிடப்பட்டுள்ளன.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு சார்பில்  5 ஆண்டுகள் சாதனை மலர் மூன்று வெளியிடப்பட்டுள்ளன.

 கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் அரசு தற்போது தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறது.

இதை முன்னிட்டு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் மீனவர் நலன், நலப்பணி, மாணவர் மற்றும் இளைஞர் நலனில் என்ஆர் அரசு என்னும் தலைப்புகளில் 5 சாதனைகள் அடங்கிய 3 நூல்கள் வெளியீட்டு விழா சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, 5 ஆண்டு சாதனைகள் அடங்கிய 3 நூல்களை வெளியிட்டார். அப்போது அமைச்சர்கள்  மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.

மாணவர் மற்றும் இளைஞர் நலன்

இந்நிலையில், மாணவர் மற்றும் இளைஞர் நலன் குறித்த நூலில், சிபிஎஸ்இ பாடத்திட்ட அறிமுகம், லாஸ்பேட்டையில் ரூ.5.5 கோடி செலவில் கட்டப்பட்ட அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் திறப்பு, பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற 11,748 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல், காரைக்காலில் ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு, காமராஜர் நிதியுதவித் திட்டத்தில் பிஎஸ்சி நர்சிங் பயிலும் மாணவர்களை சேர்த்தது, தகுதி அடிப்படையில் 7 பேருக்கு அரசுப் பணி வழங்கியது, 50 பட்டதாரிகளுக்கு சென்னையில் ஐஏஎஸ் பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல சாதனைகள் இடம் பெற்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை

நலப் பணிகள் குறித்த நூலில், இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கியது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடக்கம், முதியோர், விதவைகள், ஆதரவற்ற மகளிருக்கான உதவித்தொகை உயர்வு, இருதய அறுவை சிகிச்சைகளை புதுவையிலேயே மேற்கொள்ள, சென்னை ப்ரான்டியர் லைப் லைன் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது, தானே புயல் நிவாரண உதவித்தொகை, 2015-ம் ஆண்டு இறுதியில் பெய்த தொடர் கனமழைக்கான நிவாரண உதவித்தொகை, நவ.1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடியது உள்ளிட்ட பல சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன..

மீனவர்களுக்கான திட்டங்கள்

இதேபோல, மீனவர் நலன் குறித்த நூலில், ஏனாமில் நவீன மீன் அங்காடி திறப்பு, தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பனிக்கட்டி உற்பத்தி கூடம் திறப்பு, இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 76 காரைக்கால் மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுத்தது, விசைப் படகு மீனவ உரிமையாளர்களுக்கு இலவச குளிர்சாதன பெட்டி வழங்கியது, நல்லவாடு கிராமத்தில் ரூ.21 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 300 சுனாமி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கல் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 3 நூல்களும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.