
திருநள்ளாறு சரஸ்வதி தீர்த்தக் கரையில் வி.ஐ.பி. நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்
திருநள்ளாறு சரஸ்வதி தீர்த்தக் கரையை மேம்படுத்தும் விதமாக பக்தர்கள் வரிசையில் செல்ல நடைபாதை, கூரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருநள்ளாறு சரஸ்வதி தீர்த்தக் கரையை மேம்படுத்தும் விதமாக பக்தர்கள் வரிசையில் செல்ல நடைபாதை, கூரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் சுற்றுவட்டாரத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவை உள்ளன. பக்தர்கள் பெரும்பாலும் நள தீர்த்தத்திலேயே நீராடிவிட்டு கோயிலுக்கு செல்கின்றனர். பிற தீர்த்தங்களை பக்தர்கள் ஓரளவுக்கே பயன்படுத்துகின்றனர்.
பிரம்ம தீர்த்தத்தில் தெப்போத்ஸவம் நடத்தப்படுகிறது. மூன்று தீர்த்தங்களும் ஒவ்வொரு வகையில் புனிதத் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. கோயிலுக்கு தென் பகுதியில் சரஸ்வதி தீர்த்தம் உள்ளது. குளத்தின் ஒரு கரை கான்கிரீட் இல்லாமல் மணல் மூட்டை, மரங்களால் தடுப்பு செய்யப்பட்டிருந்தது. இக்கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை வளாகத்தில் அமைப்பில் பக்தர்கள் கோயிலுக்கு செல்கின்றனர்.
பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துதல், வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கரையை மேம்படுத்த தற்போது கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. குளக்கரையோரத்தில் வி.ஐ.பி. நடைபாதை அமைக்கும் விதத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வம் கூறியது:
ரூ. 45 லட்சம் திட்ட மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படுகிறது. குளத்தின் தென் மேற்கு புறக் கரையில் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு வீதியிலிருந்து பக்தர்கள் தற்போது கோயிலுக்குள் வருகின்றனர்.
இவர்களுக்கு வசதியாக வரிசை வளாகமும், சிறிது தூரம் வந்த பிறகு ஓய்வெடுத்துச் செல்ல வசதியாக ஓய்வு வளாகமும் அமைக்கப்படுகிறது.
இவை பிரதான சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள ஷீட்டு முறையில் அமைக்கப்படும். இப்பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த வரிசையானது முற்றிலும் வி.ஐ.பி.க்கள் வரிசை. இந்தப் பணிகள் அடுத்த ஒரு மாத காலத்துக்கு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.
பக்தர்கள் கியூ காம்ப்ளக்ஸ் என்ற வரிசை வளாகத்தின் வழியாகவும், கட்டண வரிசையில் வருவோர் ராஜகோபுரம் வழியாகவும் கோயிலுக்குள் செல்வர். தற்போது அமைக்கப்படும் பகுதி வி.ஐ.பி. பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






