5 இடங்களில் கைத்தறி குழுமம்: அமைச்சர் ஆலோசனை

புதுச்சேரியில் கைத்தறியை மேம்படுத்த 5 இடங்களில் கைத்தறி குழுமங்கள் அமைப்பது தொடர்பாக சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
Updated on
1 min read

புதுச்சேரியில் கைத்தறியை மேம்படுத்த 5 இடங்களில் கைத்தறி குழுமங்கள் அமைப்பது தொடர்பாக சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
 கைத்தறியை மேம்படுத்த கைத்தறி குழுமம் அமைக்க, மத்திய அரசு திட்டத்தின்படி செயல்பட புதுவையில் 5 இடங்களில் கைத்தறி குழுமம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், நெசவாளர் சேவை மைய இயக்குநர் விஷேஷ் நெüட்டியால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
 அதையடுத்து, காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு ஆலை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு அரசுச் செயலர் சுந்தரவடிவேலு, தொழிலாளர் நல ஆணையர் வல்லவன், காரைக்கால் தொழிலாளர் நல அதிகாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அதைத்தொடர்ந்து ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் தொகுதிகளில் ரூர்பன் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாகவும் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அரசு உயர் அதிகாரிகள், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் கொம்யூன் அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com