புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முதல்வருக்கு வர்த்தக சபை நன்றி

ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமிக்கு புதுச்சேரி வர்த்தக சபை நன்றி தெரிவித்தது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 3:24 am

தினமணி

ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமிக்கு புதுச்சேரி வர்த்தக சபை நன்றி தெரிவித்தது.
 கடந்த ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பல்வேறு அத்தியாவசிய பொருள்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு தரப்பட்ட மக்கள், வணிக, தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டனர்.
 இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் குழுவில் அங்கம் வகிக்கும் முதல்வர் நாராயணசாமி கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற
 23-ஆவது கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருள்களுக்கு வரி விகிதத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் தந்தார்.
 இந்த நிலையில், 177 பொருள்களுக்கான வரிவிகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
 இதனால், தொழில்துறையினர், பொதுமக்கள், வணிகர்கள் மிகுந்த பயன்பெறுவர்.
 இந்த நிலையில், முதல்வரின் தொடர் நடவடிக்கையை பாராட்டி புதுச்சேரி வர்த்தக சபைத் தலைவர் கே.ஏ.செண்பகராஜன் தலைமையில் நிர்வாகிகள் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
 மேலும், அதிகபட்ச அளவான 28 சதவீதத்தையும் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.