மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

காங்கிரஸ் சார்பில் இன்று உண்ணாவிரதம்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.9) உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:57 am

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.9) உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டுகளாக தவறான பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்து, அனைத்து தரப்பு மக்களையும் அல்லல்பட வைத்த மத்திய பாஜக அரசால் நாடு முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலித் வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மெத்தனம், எதிரிகள் மீதி பழி போடுவது என பாஜக அரசின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, மதச் சார்பின்மை,  தேச ஒற்றுமை,  சகோதரத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளைக் காக்க, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொள்ளுமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார். அதன்படி, திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.