பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

ஜிப்மரில் மின்னணு வகுப்பறைகள்

ஜிப்மர் மருத்துவமனையில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் இயக்குநர் (பொ) விஷ்ணு பட் தெரிவித்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:56 am

ஜிப்மர் மருத்துவமனையில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் இயக்குநர் (பொ) விஷ்ணு பட் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  நாட்டிலுள்ள இதர மருத்துவக் கல்லூரிகளுடன் கல்வித் திட்டத்தைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக, ஜிப்மரில் மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. ஜிப்மரில் பயில முடியாத மாணவர்களுக்கு இது பயன் தரும். அதேநேரம், உயர்தரமான, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவக் கல்வி பயில வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களும் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படும்.
தொலை மருத்துவக் கல்வி, அகன்ற இழைக்கற்றை இணையதள வசதி, தேசிய தகவல் மையம், புதுவை கிளை மூலம் தேசிய அறிவுசார் மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஜிப்மரில் உள்ளது. இது தென்னிந்தியக் கல்வி மண்டல வள மையமாகத் திகழ்கிறது.
தேசிய மருத்துவக் கல்லூரிகளின் இணையதள சேவைத் திட்டத்தின் ஒரு அங்கமாக மின்னணு வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வசதிகள் 2015-ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.