மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் பேசி மின் கட்டணத்தைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு நிர்ணயித்த ஆணையம்தான் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து கடந்த ஆண்டே எனக்கு கோப்பு வந்தது. அப்போது, நான் அதை மறுத்துவிட்டு, மறு பரிசீலனை செய்யும்படி கோரிக்கை விடுத்தேன்.
மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு ரூ. 1,200 கோடி செலவாகிறது. ஆனால், மின்சார விற்பனை மூலம் ரூ.1,000 கோடி மட்டுமே கிடைக்கிறது. மின் கட்டணத்தைக் குறைக்க ஆணையத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். எங்களது ஆட்சியில் மின் திருட்டு இல்லை. கடந்த ஆட்சியில் தொழிற்சாலைகள் நிலுவை வைத்துள்ள பாக்கியை வசூலிக்க அந்த நிறுவனங்களின் பொருள்களை ஜப்தி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். மின் கட்டண உயர்வுக்கும், அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக இருந்தது. அப்போது, பெட்ரோல் ரூ. 70-க்கும், டீசல்
ரூ. 58-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலராக குறைந்தாலும், பெட்ரோல் ரூ. 76-க்கும், டீசல் ரூ. 63-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவின் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது. இதை மத்திய அரசு நுகர்வோருக்குத் தராமல் கொள்ளையடித்து வருகிறது. உடனடியாக பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், புதுவையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது. தமிழகத்தைவிட புதுவையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4-ம், டீசல் ரூ. 3-ம் குறைவாக உள்ளன.
காரைக்காலில் ஜிப்மர் கிளை அமைத்து 50 மாணவர்கள் படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு காரைக்காலில் ஜிப்மர் கிளைக்காக கல்லூரி, மருத்துவமனை, விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு ரூ. 404 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஓராண்டுக்குள் மருத்துக் கல்லூரி கட்டடத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காரைக்காலில் தரம் வாய்ந்த மருத்துவம் கிடைக்கும்.
புதுவையில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ரெளடிகள், கொலை செய்பவர்களை கைது செய்யவும், குண்டர் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டேன். இதனால், இதுவரை 19 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரம் பெருகியுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு செலுத்தும் பிரீமியத் தொகையைவிட, குறைவான தொகையே சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் மருத்துவக் காப்பீட்டு திட்டம் நீக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் கலந்து பேசி விரைவில் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

