புதுவையில் நீர்நிலைகளை மறுசீரமைக்கும் திட்டம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி, புதுவை ஆளுநர் மாளிகையில் கடந்த மாதம் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், துறையின் உயர் அதிகாரிகள், புதுச்சேரியில் உள்ள தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை மறுசீரமைக்க புதிய திட்டம் ஒன்றை வகுக்க முடிவு செய்யப்பட்டது.
அரசு, தனியார் பங்களிப்புடன் நீர்நிலைகளை சீரமைப்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இத்திட்டம் தயாரிக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. மேலும் எதிர்வரும் மழைக் காலத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் மழை நீரை சேமிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆளுநர் கிரண் பேடி ஆலோசனை நடத்தினார்.
மழைநீரை சேமிக்க எடுக்கப்பட்டு வரும் ஆயத்தப் பணிகள் தொடர்பாக ஆளுநரிடம் திகாரிகள் விளக்கினர்.
ஓரிரு நாள்களில் இத்திட்டம் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்துடன் ஆலோசனை நடத்தவும் ஆளுநர் கிரண் பேடி திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸýம் பங்கேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









