மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வாகன ஓட்டிகளுக்காக சிக்னல்களில் பசுமை பந்தல்

கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கும் வகையில் புதுச்சேரியில் முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படுகின்றன.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:59 am

DIN

கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்கும் வகையில் புதுச்சேரியில் முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படுகின்றன.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.  வெயிலால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் வாகன ஓட்டிகளே. மேலும், சிக்னல்களில் நிற்கும்போது அவர்கள் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாகின்றனர். வெயிலின் கடுமை தாங்காமல் சிக்னலில் இளம் பச்சை நிறம் வருவதற்கு முன்பாகவே செல்ல முயல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆங்காங்கே நீர், மோர் பந்தல் அமைத்துள்ளதைப் போல, முதலியார்பேட்டையைச் சேர்ந்த சமூக சேவகரும்,  வழக்குரைஞருமான சம்பத் என்பவர் ராஜா திரையரங்க சிக்னலில் வாகன ஓட்டிகள் நிற்கும் இடத்தில்  பச்சை நிற துணியினால் ஆன பந்தலை அமைத்துள்ளார்.  
இதனால் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் கிடைப்பதால் மகிழ்ச்சியடைகின்றனர். 
இதுகுறித்து  வழக்குரைஞர் சம்பத் கூறும்போது,  வெயிலின் கொடுமையால் வாகனத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இதுபோன்ற நிழல் தரும் பந்தல் அமைத்துள்ளேன்.  இன்னும் 2 நாள்களில் புதுச்சேரியில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பந்தல் அமைத்துத் தரப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.