நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை கிடையாது என்று பேரவையில் தீர்மானம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுவை சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை என்ற தீர்மானத்தை அரசுக் கொறடா ஆர்.அனந்தராமன் கொண்டு வந்தார். அதை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட பேரவைத் தலைவர் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்தார்.
அதையடுத்து இது தொடர்பாக நடைபெற்ற விவாதம்:
ஆ.அன்பழகன் : யாரையும் பேசவிடாமல் தீர்மானம் நிறைவேற்றி இதுவும் ஆளுநர் அலுவலகம் போல் ஆகிவிட்டது.
சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் (நியமன எம்.எல்.ஏ.க்கள்):
தீர்ப்பு வரும் வரை இந்தத் தீர்மானத்தை எடுக்கக்கூடாது.
அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்): பேரவை தவறாக செயல்படுகிறது.
லட்சுமிநாராயணன் (காங்கிரஸ்): தனி சுதந்திர அமைப்பு கொண்டது சட்டப்பேரவை.
ஜெ.ஜெயபால் (என்.ஆர்.காங்): தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த அனுமதிக்காததால் என்.ஆர்.காங்கிரஸ் வெளிநடப்பு செய்கிறது. இதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர் 9.53 மணிக்கு சட்டப்பேரவையை காலவரையரையின்றி ஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
வெளிநடப்பிற்கான காரணம் குறித்து எம்.எல்.ஏ. ஜெ.ஜெயபால் கூறியதாவது: அரசுக் கொறடா அனந்தராமன் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். என்.ஆர். காங்கிரஸ் அதன்மீது விவாதம் நடத்த அனுமதி கேட்டதற்கு வழங்கப்படவில்லை. ஒரு தலைப்பட்சமாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கு எதிரானது. உறுப்பினர்களின் விவாதத்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
ஒரு நியமன சட்டப்பேரவை உறுப்பினருக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதை சட்டப்பேரவை விதிகளின்படித்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஒரு தனி நபர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








