அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள்: நாம் தமிழர் கட்சியினர் சேகரிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில், கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

நாம் தமிழர் கட்சி சார்பில், கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி கதிர்காமம் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்,  மரக்கன்றுகள் வழங்குதல், கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் சேகரித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இந்த நிகழ்வில் அந்தக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.   தொகுதி பொறுப்பாளர்கள் த.ரமேசு வே. திருமுருகன், கி.தனுசு,  வரதராஜ் ஆகியோர்  ஒருங்கிணைத்தனர். 
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை இந்திரா நகர் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் நிசார் அகமது தலைமையில் சேகரிக்கப்பட்டது. பிற தொகுதிகளிலும் நிவாரணப் பொருள்கள்  சேகரிக்கப்பட்டு அவை  கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்படும். 
புதிதாக கட்சியில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையுடன்,  மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.