சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி

புதுவை தெற்கு மாநில திமுக இலக்கிய அணி சார்பில், பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 9:52 am IST

புதுவை தெற்கு மாநில திமுக இலக்கிய அணி சார்பில், பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு,  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, நிகழாண்டுக்கான போட்டி  புதுச்சேரி மறைமலையடிகள் சாலை வெங்கட்டசுப்பா ரெட்டியார் சிலை அருகில் உள்ள தனியார் விடுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியாகவும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடைபெற்றன.
புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்து போட்டியைத் தொடக்கிவைத்தார்.  மாநில இலக்கிய அணி நிர்வாகிகள் எம்.எஸ். ராஜா (தலைவர்), அமைப்பாளர் பி.டி. பன்னீர்செல்வம், பொருளாளர் ந. ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் ஜி.என்.ஸ்ரீதர், ஆர்.கே.கலிவரதன், துணை அமைப்பாளர்கள் அருணகிரி, கலியசாமி, தர்மராஜ், புரவலர் ஆளவந்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.  இந்தப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்ச் சங்கப் பொருளாளர் சீனு.மோகன்தாஸ், சிறப்பு நடுவர் குழு நெறியாளர்களாக வேல்முருகன், சீனு.வேணுகோபால்,  தமிழ்ச் சங்கச் செயலர் பாலசுப்ரமணியன், திருவளவன், இளங்கோவன், அப்துல் மஜீத், கலியபெருமாள், கவிபூஞ்சோலை ஆகியோர் தலைமையிலான குழுவினர் செயல்பட்டு, போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவர்களைத் தேர்வு செய்தனர்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவ,  மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் முதலாம் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், ஆறுதல் பரிசாக ஐந்து பேருக்கு தலா ரூ. 1,500 வழங்கப்பட்டன. 
போட்டியாளர்களுக்கான முதல் பரிசுகள், இறுதிப் போட்டிகள் நடைபெறும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும். இரண்டாம்,  மூன்றாம் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் அவரவர் முகவரிக்கு முரசொலி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.