‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தென் மண்டல துணை வேந்தர்கள் மாநாடு புதுவை பல்கலை.யில் இன்று தொடக்கம்

தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாடு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (டிச.19) தொடங்குகிறது. இந்த மாநாட்டை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைக்கிறார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாடு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (டிச.19) தொடங்குகிறது. இந்த மாநாட்டை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைக்கிறார்.
 இதுகுறித்து புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங்,  இந்திய பல்கலைக் கழகங்களின் சங்கப் பொதுச்செயலர் பர்க்கான் கமர் ஆகியோர்  செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் ஆண்டு மாநாடு 
சங்க வருகிற பிப்ரவரி மாதம் ஒடிஸாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக புதுவை பல்கலைக்கழகத்தில் தென் மண்டல அளவிலான துணைவேந்தர்கள் பங்கேற்கும் மாநாட்டை இரண்டு நாள்கள் நடத்தப்படவுள்ளது. இதற்கான தொடக்க விழா  புதுவை பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் புதன்
கிழமை நடைபெறுகிறது. மாநாட்டை புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். "அறிவான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு உயர் கல்வித் துறையில் தேவைப்படும் நவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கர்நாடகம்,  ஆந்திரம்,  கேரளம்,  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 68 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பிரதிநிதிகள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். 
  இந்த இரண்டு நாள் மாநாட்டில் துணை வேந்தர்களால் உயர் கல்வி குறித்து பரிந்துரைக்கப்படும் கருத்துகள் அனைத்தும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.