அனுமதியின்றி நுழைந்த 6 வாகனங்களுக்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ரூ. 6,600 அபராதம் விதித்தனர்.
புத்தாண்டையொட்டி, புதுச்சேரிக்கு கேரளம், கர்நாடகம், தமிழகப் பகுதிகளிலிருந்து பல்வேறு வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பலர், சுற்றுலா வாகனங்களில் உரிய அனுமதியின்றி புதுச்சேரிக்கு வருகின்றனர்.
இதையறிந்த, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகர் தலைமையில் போக்குவரத்துத் துறை ஆய்வாளர் சுந்தர், ரவிசங்கர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு, புதுச்சேரி எஸ்.வி.படேல் சாலை, மிஷன் வீதி, பழைய துறைமுகம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தப் பகுதிகளில் வந்த 140 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில், உரிய ஆவணங்களின்றி வந்த 6 வாகனங்களுக்கு ரூ. 6,600 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதி வழியில் போராட உரிமை உள்ளது: உச்சநீதிமன்றம்

தாய்மாா்கள் குறித்த கேரள முதல்வரின் கருத்தால் சா்ச்சை!
இந்தியாவின் தொழில் வளா்ச்சியில் தமிழகத்தை முன்மாதிரியாக உருவாக்குவோம்: அமைச்சா் பா்வேஸ்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


