ஜிப்மரில் தேசியக் கருத்தரங்கம்
புதுச்சேரி ஜிப்மரில் இரைப்பை குடலியல் ஊட்டச்சத்து குறித்து நடைபெற்று வந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.


புதுச்சேரி ஜிப்மரில் இரைப்பை குடலியல் ஊட்டச்சத்து குறித்து நடைபெற்று வந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
புதுச்சேரி ஜிப்மர் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை கழகம் சார்பில், இந்தியாவில் இரைப்பை குடலியலில் ஊட்டச்சத்து நிலை என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை ஜிப்மர் இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா தொடக்கி வைத்தார். இதில், மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை கழகத்தின் உறுப்பினர்கள் பிரவின் மல்கோத்ரா , ரவிகிரண் ஆகியோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் ஊட்டச்சத்து நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவ ஊட்டச்சத்து தொடர்பான தலைப்புகளில் கருத்துபட்டறைகள் நடைபெற்றன. ஊட்டச்சத்து நிபுணர்களால் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...