வாலிபால் போட்டிகள்: இந்திரா காந்தி,  ஒளவையார் கல்லூரிகள் சாம்பியன்

புதுச்சேரி பல்கலை.க்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திரா காந்தி கல்லூரியும்,  மகளிர் பிரிவில் ஒளவையார் கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன.
Updated on
1 min read

புதுச்சேரி பல்கலை.க்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் இந்திரா காந்தி கல்லூரியும்,  மகளிர் பிரிவில் ஒளவையார் கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால்,  இறகுப்பந்துப் போட்டிகள் புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஜன.30 முதல் பிப்.2-ம் தேதி வரை நடைபெற்றன.   வாலிபால் போட்டி ஆண்கள்,  மகளிருக்கு தனித் தனியாகவும்,  இறகுப் பந்துப் போட்டி மகளிருக்கு மட்டும் நடைபெற்றது.
புதுச்சேரி,  காரைக்கால்,  மாஹே,  ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.  வாலிபால் ஆண்கள் பிரிவில் புதுச்சேரி இந்திரா காந்தி கலைக் கல்லூரி முதலிடத்தையும்,  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும் பிடித்தன.   மகளிர் பிரிவில் புதுச்சேரி ஒளவையார் கல்லூரி முதலிடத்தையும்,  பாரதிதாசன் மகளிர் கல்லூரி 2-வது இடத்தையும் பிடித்தன.
அதேபோல, இறகுப் பந்துப் போட்டியில் காரைக்கால் பொறியியல் கல்லூரி முதலிடத்தையும்,  சாரதா கங்காதரன் கல்லூரி 2-வது இடத்தையும் பிடித்தன.  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பிப்.2-ஆம் தேதி புதுச்சேரி கால்நடை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.    கால்நடை கல்லூரி புல முதன்மையர்  ராம்குமார்,  இந்திரா காந்தி கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பரிசு வழங்கினர்.  புதுச்சேரி பல்கலை.  விளையாட்டுத்துறை உதவி இயக்குநர் சிவராமன் நன்றி தெரிவித்தார்.  
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவக் கல்லூரி உடல் கல்வி இயக்குநர் முகமது ஹசீம்,  கலைக் கல்லூரி விளையாட்டு இயக்குநர் சூரியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com