கால்நடை மருத்துவக் கல்லூரியில் கலை, இலக்கியத் திருவிழா
புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரியில் கலை, இலக்கிய மற்றும் கலாசாரத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை ஆராய்ச்சி மருத்துவக் கல்லூரியில் கலை, இலக்கிய மற்றும் கலாசாரத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
நடனம், பல குரல், விவாதம், வினாடி-வினா, ஆடை அலங்காரம், சமையல் உள்பட 35 வகையான போட்டிகள் நடைபெற்றன. விழாவுக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.ராம்குமார் தலைமை வகித்தார். இப்போட்டிகளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் தொடக்கி வைத்தார்.
அவர் பேசும்போது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், இன்போசிஸ் துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, மைக்ரோஸாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரின் முழு வரலாறையும் மாணவர்கள் படிக்க வேண்டும். கடின முயற்சியால் அவர்கள் வெற்றியாளர்களாக எப்படி மாறினார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
பின்னர், துணைவேந்தர் குர்மீத் சிங், கல்லூரி வளாகத்தில் உள்ள கண்காட்சி மண்டபம், மூலிகை தோட்டம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். நாடு முழுவதும் இருந்து 314 மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கலாசாரச் செயலாளர் ஜோசிகா நாவுக்கரசு கலாசார திருவிழா குறித்து விளக்கிப் பேசினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுச் செயலாளர் ராஜன் நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...