மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சிங்காரவேலர் நினைவு தினம்: அமைச்சர் நமச்சிவாயம் மரியாதை

புதுச்சேரி அரசு சார்பில் சிங்காரவேலர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:58 am

தினமணி

புதுச்சேரி அரசு சார்பில் சிங்காரவேலர் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 இதையொட்டி புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 தெற்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ, தலைமையில் நிர்வாகிகள் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுபோல் வடக்கு மாநில திமுக நிர்வாகிகளும் அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
 இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.விசுவநாதன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
 இதேபோல பாமக மீனவர் அணி தலைவர் உத்ராடன், பார்வார்டு பிளாக் முத்து உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் சிங்காரவேலர் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.