காரைக்கால் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் 

புதுச்சேரியை போல காரைக்கால் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்று காரைக்கால் பிராந்தியத்தின் நிரவி டி.ஆர்.பட்டிணம் திமுக எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Updated on
1 min read

புதுச்சேரியை போல காரைக்கால் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்று காரைக்கால் பிராந்தியத்தின் நிரவி டி.ஆர்.பட்டிணம் திமுக எம்.எல்.ஏ. கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:
குளம், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் மேம்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது காரைக்காலில் இல்லை. காரைக்காலில் தூர்வாரும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மழைக் காலத்தில் தான் ஒப்பந்தப்புள்ளியை விடுகின்றனர். வறட்சிக்காலத்தில் ஒப்பந்தப்புள்ளி விட்டால்தான் சரியாக இருக்கும். 
விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து இலவசமாக தரப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஏதும் காரைக்காலில் தரப்படவில்லை. 2 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே தந்தனர். அதுவும் குறிப்பிட்ட நபர்களுக்கே கொடுத்தனர். 
அதிலும் விவசாயம் செய்பவர்களும், நிலத்தின் உரிமையாளர்களும் வேறு, வேறாக இருந்தால் அந்த நிதியும் புதுச்சேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டு விடுகிறது. எனவே காரைக்காலுக்கு இவ்வளவு என நிர்ணயம் செய்து தர வேண்டும்.
3000 கிராமங்களில் மண் மாதிரி சேகரிக்கப்பட்டது. ஆனால் அதன் தொடர்ச்சியாக என்ன பயிர் செய்யலாம் என்று கூறவில்லை. 
புதுச்சேரியில் நெல், கரும்பு, எள் என மாற்றி, மாற்றி பயிர் செய்கின்றனர். காரைக்காலில் நெல் தவிர வேறு எதுவும் பயிர் செய்ய முடியவில்லை. ஆளுநர் புதுச்சேரியில் அக்கறை செலுத்துவதைப்போல் காரைக்காலின் மீதும் செலுத்த வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com