சிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் பட்டியல்: ஜிப்மருக்கு 3-ஆவது இடம்
சிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் தேசிய அளவில் ஜிப்மர் கல்லூரி 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.


சிறந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் தேசிய அளவில் ஜிப்மர் கல்லூரி 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து, புதுவை ஜிப்மர் இயக்குநர் எஸ்.விவேகானந்தம் வெளியிட்ட செய்தி:
திரிஷ்டி ஸ்டேட்டர்ஜிக்கல் ரிசர்ச் சர்வீசஸ் அமைப்பு, அவுட்லுக் பத்திரிகை ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த தொழில்கல்வி வழங்கும் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
பொறியியல், மருத்துவம், கட்டடக் கலை, சட்டம் உள்ளிட்ட 12 வகையான தொழில் படிப்புகளை வழங்கக்கூடிய நாடு முழுவதும் உள்ள 2,700 கல்லூரிகள் மதிப்பிடப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் இந்த 12 வகை தொழில் படிப்புகளுக்கும் தனித் தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மருத்துவக் கல்லூரிகளில் ஜிப்மர் தேசிய அளவில் 5-வது இடத்தையும், அரசு மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இக்கல்லூரிகளுக்கு பல்வேறு கேள்விகள் வினாத் தொகுப்பை அளித்து அதில் கிடைக்கும் பதில்களை வைத்தும், நேரடி கள ஆய்வு செய்தும் தரவரிசை பட்டியலுக்கான தரவுகள் பெறப்பட்டன.
கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்புடன் வெளியேறும் பட்டதாரிகள் எண்ணிக்கை, மாணவர்களின் தனித்திறன் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை மையமாக வைத்து இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது.
165 கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பேராசிரியர்கள், மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் சுமார் 20,000 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இதன் அடிப்படையில் தேசிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...