ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

முழு சந்திரமுகியாக மாறிவிட்டார் காங்கிரஸ் எம்எல்ஏ

முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான க.லட்சுமிநாராயணன் பேசும்போது குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏ. சிவா, காங்கிரஸ் எம்எல்ஏ முழு சந்திரமுகியாக மாறி பேசி வருவதாக குறிப்பிட்டதால்

News image
Updated On :5 ஜூன் 2018, 5:27 am

DIN

முதல்வரின் நாடாளுமன்றச் செயலரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான க.லட்சுமிநாராயணன் பேசும்போது குறுக்கிட்ட திமுக எம்.எல்.ஏ. சிவா, காங்கிரஸ் எம்எல்ஏ முழு சந்திரமுகியாக மாறி பேசி வருவதாக குறிப்பிட்டதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
புதுவை சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:
நிதி நிர்வாகம் இரு ஆண்டுகளாக சரியாக உள்ளதாக ஆளுநர் சரியாகத்தான் குறுப்பிட்டுள்ளார். கடந்த அரசு நிதி நெருக்கடி என்ற சாபத்தை அளித்தது. வீட்டு வசதி ஏற்படுத்துவதில் அரசு சிறப்புடன் உள்ளது. உதாரணமாக எனது தொகுதியில் ரூ.10 கோடி செலவில் 96 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் ரூ. 2 லட்சம் மானியம் 1500 பேர் வீடு கட்ட தரப்படுகிறது. மேலும் 7 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தில் நிதி அளிக்கவும் திட்டமிட்டு அரசு செயல்பட்டு வருகிறது. தேசிய அளவில் ஆயிரத்துக்கு 900 பெண்கள் தான் இருக்கின்றனர். ஆனால், புதுவையில் ஆயிரத்துக்கு 1037 பெண்கள் உள்ளனர். புதுவையில் பெண் சிசு கொலை இல்லை என்பதை இந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது.
(அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் அசனா எழுந்து காரைக்காலில் அரசு மருத்துவமனையில் நிலவும் அவமானங்கள் குறித்து பேச முற்பட்டார், உடன் திமுக எம்எல்ஏ சிவா குறுக்கிட்டு, " தற்போது முழு சந்திரமுகியாக மாறி எம்எல்ஏ (லட்சுமிநாராயணன்) பேசி வருகிறார். குறுக்கீடு செய்யாதீர்கள் என்று குறிப்பிட்டார். அப்போது பேரவைத் தலைவர் உள்பட அனைவரும் சிரித்துவிட்டனர்)
(தொடர்ந்து லட்சுமி நாராயணன் பேசும்போது வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம் என்று குறிப்பிட்டார். அப்போது பொறுமையின்றி எழுந்த திமுக உறுப்பினர் சிவா " அரசு ஒருவருக்காவது வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதா? என்று கேள்வி எழுப்பியதுடன் பல ஆயிரம் இடங்கள் அரசுத்துறைகளில் காலியாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.)
கடந்த ஆட்சியில் மின் தடையை நீக்கக் கோரி மக்கள் தூங்காமல் போராட்டம் நடத்தினர். ஆனால் தற்போது தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி கல்விக்கேந்திரமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அனைத்து குடும்பத்திலும் ஒரு பட்டதாரி இருக்கும் நிலை புதுச்சேரியில் உருவாகும் என்றார் லட்சுமி நாராயணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.