குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப் படைகள்: அமைச்சர் தகவல்

திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப் படைகள்: அமைச்சர் தகவல்
Updated on
1 min read

திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்ட பெண் ஆராயி, அவரது மகள் ஆகிய இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 அவர்களை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
 பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இதேபோல நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்துக்கு தகவல்கள் வந்துள்ளன. ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் தாய், மகள் ஆகிய இருவரும் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார் அவர்.
 அப்போது, புதுவை அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன், வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com