காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பல்கலை. மாணவர்கள் மோதல்: மாணவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:21 am

தினமணி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
 புதுச்சேரி அருகேயுள்ள பாகூரைச் சேர்ந்தவர் முகிலன். இவர், காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். விடுதி மாணவர்கள் சாப்பிடுவதற்காக அங்கு அமுதம் உணவு விடுதி உள்ளது. அங்கு தங்களுக்குத் தேவையான உணவை மாணவர்களே எடுத்து சாப்பிட வேண்டும்.
 இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விடுதியில் சாப்பிட முகிலன் வந்தார். அவர் சாப்பாடு வைத்துக் கொண்டிருந்தபோது உடல்கல்வி 2-ஆம் ஆண்டு மாணவர்களான மதுரையைச் சேர்ந்த கார்த்தி, செல்வகுமார், நீலமேகம், ஹரீஸ் ஆகிய 4 பேர் சாப்பிட வந்தனர்.
 அவர்கள் முகிலனிடம் ஏன் அதிகமாக உணவை வைத்துள்ளாய் எனக் கேட்டு தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து முகிலன் எதிர்த்துக் கேட்டதால் ஆத்திரமடைந்த 4 பேரும் முகிலனை திட்டி, அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டனராம்.
 இதில் முகிலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் பல்கலைக்கழக காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமாரிடம் புகார் செய்தார். மேலும் இது குறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.