புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கேலி செய்யும் இளைஞர்களின் மூக்கை உடைக்க வேண்டும்: கிரண் பேடி

கேலி செய்யும் இளைஞர்களின் மூக்கை உடைக்க வேண்டும் என்று புதுவை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.

Updated On :21 மே 2018, 11:05 pm

கேலி செய்யும் இளைஞர்களின் மூக்கை உடைக்க வேண்டும் என்று புதுவை ஆளுநர் கிரண் பேடி அறிவுறுத்தினார்.
புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுவை மாநில மகளிர் வள மையம், இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையம் சார்பில், "பெண்கள் தலைமையில் பெண்கள்' என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு பயிற்சிப் பட்டறை கூட்டுறவுக் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.
பயிற்சிப் பட்டறையை தொடக்கிவைத்து ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
பெண்களுக்கு புத்தக அறிவு மட்டுமே தன்னம்பிக்கையை தராது. என்னால் தலைமையேற்க முடியும் என்று கூறி தைரியமாக முன் வரவேண்டும்.
அப்போதுதான் தன்னம்பிக்கை ஏற்படும். முதலில் பெண்கள் தயக்கமின்றி தனியாக பயணம் செய்ய வேண்டும்.
மாணவிகள் வெளியே செல்லும்போது இளைஞர்கள் பின் தொடர்ந்தாலோ, கேலி, கிண்டல் செய்தாலோ தங்களிடம் இருக்கும் செல்லிடப்பேசியில் அந்த இளைஞரை முதலில் புகைப்படம் எடுக்க வேண்டும். பின்னர் எட்டி உதைத்து, மூக்கை குத்தி உடைக்க வேண்டும். அப்படி தாக்கிய பிறகு அவர்கள் உங்கள் பக்கமே வரவே மாட்டார்கள்.
இந்தப் பயிற்சி முடித்து வெளியே போனவுடன் மனதளவில் தன்னம்பிக்கை உள்ள பெண்களாக இருக்க வேண்டும். பெண்கள் என்னை அடிக்கிறார்கள் என்று ஆண்கள் புகார் அளிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் தலைமையில் ஆண்கள் என்ற நிலை மாற வேண்டும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.