ஜிப்மரில் உலக கைகழுவுதல் வார விழா நிறைவு தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக கைகழுவுதல் தின நிகழ்ச்சிகள் கடந்த அக். 15-ஆம் தேதி முதல் இரு வாரங்களாக தொடர்ந்து ஜிப்மரில் நடைபெற்றது. அதன் நிறைவு விழாவையொட்டி, ஜிப்மர் செவிலியர் துறை, மருத்துவமனை தொற்றுநோய் கிருமிகள் ஒழிப்புக் குழு ஆகியவை சார்பில், "தொற்றுநோய் கிருமிகள் கட்டுப்பாட்டில் செவிலியர்களின் பங்கு' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்தை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் எஸ். விவேகானந்தம் தொடக்கி வைத்தார். ஜிப்மர் மருத்துவமனை கண்காணிப்பு அதிகாரி அசோக்சங்கர் ராவ் படே முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை தொற்றுநோய் கட்டுப்பாட்டு அதிகாரி அபூர்பா சங்கர் சாஸ்திரி, செவிலியர் பிரிவு பொறுப்பு அதிகாரி சாந்தி தமிழ்மணி, செவிலியர் கண்காணிப்பாளர் சங்கரேஸ்வரி, மருத்துவமனை நோய்க்கிருமி கட்டுப்பாட்டு செவிலியர் ராஜலட்சுமி கார்னெட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 182 செவிலியர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு மருத்துவமனை கிருமி தொற்று கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், கிருமிகளைத் தடுக்கும் முறை, மருத்துவமனையின் தொற்று- நுண்ணுயிர் தடுப்பு செயல்முறை கண்காணிப்பு ஆகியவை குறித்தும், சரியான முறையில் கை கழுவுதல், பாதுகாப்பு கவசங்களை அணிதல், மருத்துவமனையின் திட, திரவ மற்றும் மருந்துக் கழிவுகளைச் சரியான முறையில் பிரித்தெடுத்தல், அவற்றை அழிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








