புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்றதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் மாறன் உத்தரவின் பேரில், அந்தந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலி லாட்டரி சீட்டு விற்பனையைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, ஒதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி உள்ளிட்ட போலீஸார் லாட்டரி சீட்டு விற்பனையைக் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, 2 பேர் சந்தேகப்படும்படி செல்லிடப்பேசி பார்த்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் (40), விக்னேஷ் (25) என்பதும், அவர்கள் இருவரும் செல்லிடப்பேசி மூலம் 3 -ஆம் எண் போலி லாட்டரி சீட்டுகளை விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி லாட்டரி சீட்டுகள், 2 செல்லிடப்பேசிகள், ரூ.10 ரொக்கம் ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


