பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் அதன் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பெருமாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

Updated On :22 அக்டோபர் 2018, 4:34 am

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் அதன் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.பெருமாள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்தில் அமைப்பின் மாநிலச் செயலர் இரா.அந்தோணி பணிகள், அமைப்பு நிலை செயல்பாடுகள் குறித்துப் பேசினார். எதிர்கால செயல்பாடுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், துணைச் செயலர் வி.எஸ்.அபிஷேகம் பேசினர். 
கூட்டத்தில், புதுவை மாநில அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் 7,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. சுமார் 2.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். எனவே, காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில அழகு நிலையங்களில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது. இதன் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற நவம்பர் 14- ஆம் தேதி போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், அமைப்பின் மாநிலத் துணைச் செயலர் ஏ.ரூவியர், பொருளாளர் கே.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.சரவணன், பி.சக்திமுருகன், பி.பெஞ்சமின், எம்.மைக்கேல், வி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.