புரட்டாசி மாத விரதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அசைவம் விற்பனைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு, பக்தர்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். அப்போது அசைவ உணவை முழுமையாகத் தவிர்த்து விடுவர்.
இந்த நிலையில், புரட்டாசி மாதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மீன், கோழி, ஆடு உள்ளிட்ட அசைவக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. அசைவ உணவுப் பிரியர்கள் புதுச்சேரி பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள், கோழிகள், ஆடுகள் உள்ளிற்றவற்றின் மாமிசத்தை வாங்க அலை மோதினர். மார்க்கெட்டில் ஆட்டுக் கறியின் விலை ரூ. 550-க்கு விற்பனையானது. விலையைப் பொருள்படுத்தாமல் பலரும் இதை வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, கடந்த ஒரு மாதமாகவே மீன், கோழிக் கறியின் விலை குறைவாக விற்கப்பட்டது. தற்போது வியாபாரம் சற்று சூடுபிடித்துள்ளததால், கடந்த மாதத்தை விட தற்போது வியாபாரம் அமோகமாக உள்ளது. பலரும் மீன், கோழி, ஆட்டுக் கறியை வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

டாக்ஸிக் ஆழமான உளவியல் அம்சங்கள் கொண்ட திரைப்படம்: யஷ்

15 விநாடிகளில் கூலிங்! ஷாவ்மியில் அறிமுகமானது சப்தமில்லாத ஏசி!

சும்மா வந்துவிடவில்லை வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

