புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை சமுதாய ஒற்றுமை விழாவாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், ஆலோசனைக் கூட்டம் சாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் பேரவைத் தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். பொதுச் செயலர் சனில்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் துணைத் தலைவர்கள் செ.குமரகுரு, பசுபதி, நாகமணி, கேசவலு, ஸ்ரீதர் உள்பட 150-க்கும் மேற்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாக் குழுப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செப். 13-ஆம் தேதி சாரம் அவ்வைத் திடலில் 25 அடி உயர விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, சிறப்பான பூஜைகளுடன் இசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புத் தலைவர்களை அழைத்து விழாவை சமுதாய ஒற்றுமை விழாவாகக் கொண்டாடுவதென முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

