
சாதனையாளர்களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான்: முதல்வர் நாராயணசாமி பேச்சு
சாதனையாளர்களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான் என்று முதல்வர் வே.நாராயணசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சாதனையாளர்களை உருவாக்குவது ஆசிரியர்கள்தான் என்று முதல்வர் வே.நாராயணசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதுவை பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தினவிழா வில்லியனூர் தனியார் ஹோட்டலில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவில், நல்லாசிரியர் விருதுகளை வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுவை மாநிலத்தில் நிதிநிலை அறிக்கையில் 11 சதவீதம் நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி, பள்ளியில் புதுவை படிபடிப்பாக வளர்ந்து வருகிறோம். இதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரியில் ஒரு மாணவரை உருவாக்க வேண்டும் என்றால் நல்ல கல்வியை வழங்க வேண்டும். அது ஆசிரியர் கையில்தான் உள்ளது.
மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஆசிரியர்கள் தான் சாதனையாளர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களை கேட்டுக்கொள்வது பள்ளிக்கு வந்தோம், பாடம் நடத்தினோம் என்பதோடு கடமை முடிந்து விடுவதில்லை. மாணவர்களுடன் ஒன்றிணைந்து பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட்டோம், மாணவர்களை ஊக்குவித்தோம் என்பது தான் மிக முக்கியமானது.
இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். தனியார் பங்களிப்புடன் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையை அரசு எடுக்கும். ரூசா திட்டத்தில் மத்திய அரசு நூறு சதவீதம் நிதி புதுவைக்கு கொடுக்கப்பட்டு வந்தது. அது படிப்படியாக குறைத்து 60 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தியதை அடுத்து தற்போது, மத்திய அரசு 100 சதவீத நிதியை கொடுப்பதாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் ரூ.60 கோடி அதிகமாக கிடைக்கும் என்றார் நாராயணசாமி.
விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பேசியதாவது:
நான் என்னுடைய பணியை ஆசிரியர் பணியில் தொடங்கினேன். தொடக்கத்தில் மழலையர் பள்ளி ஆசிரியையாக இருந்தேன். அதன்பிறகு மேற்படிப்பு முடித்து கல்லூரி பேராசிரியராக பணியாற்றினேன்.
கல்வியும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர் பணியையும் நான் மிகவும் நேசிக்கிறேன். ஆசிரியர் பணி மிகமிக முக்கியமான பணி. சமுதாயத்தில் அதன் பங்கு அதிகம். இது மிகவும் உன்னதமான சேவை பணியாகும்.
ஆசிரியர்கள் மட்டுமே பள்ளியில் மாணவர்களை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதாக நான் உணர்கிறேன். ஒவ்வொரு குழந்தையிடமும் ஆசிரியர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதை உணரவேண்டும் என்றார் ஆளுநர் கிரண் பேடி.
முன்னதாக, கல்வித்துறைச் செயலர் அன்பரசு வரவேற்றார். விழாவில் ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்
படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 20 பேருக்கு நல்லாசிரியர் விருதை ஆளுநர் கிரண் பேடி வழங்கினார்.
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை முதல்வர் நாராயணசாமி கெüரவித்தார். விழாவில் காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, "அனுபவக் கற்றல்-காந்தியடிகளின் நயீதலீம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
பொதுப்பணி அமைச்சர் ஆ.நமச்சிவாயம், கல்வித் துறை இயக்குநர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






