இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

"தூய்மை இந்தியா'  விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி கள விழிப்புணர்வு அலுவலகம், உழவர்கரை நகராட்சி ஆகியவை இணைந்து "தூய்மை இந்தியா'  இயக்க விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.

Published On :

புதுச்சேரி கள விழிப்புணர்வு அலுவலகம், உழவர்கரை நகராட்சி ஆகியவை இணைந்து "தூய்மை இந்தியா'  இயக்க விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நகராட்சி ஆணையர் கந்தசாமி பேசியதாவது: நாம் வசிக்கும் நகரை தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது அனைவரின் பொறுப்பாகும்.  குறிப்பாக, மாணவர்களுக்கு இதில் அதிக அளவில் பங்கு உள்ளது.   தன்னார்வமாக தூய்மைப் பணியில் மாணவர்கள் ஈடுபடுவதுடன், விழிப்புணர்வுப் பணியிலும் பங்கேற்க வேண்டும். இயற்கைப் பேரிடர்கள், கழிவு மேலாண்மை குறித்த பிரச்னைகள் ஆகியவற்றுக்கு 1070, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். நகராட்சியும் மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் நகரை தூய்மையாக மாற்ற முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு கள விழிப்புணர்வு உதவி இயக்குநர் தி.சிவக்குமார் தலைமை வகித்தார்.
முன்னதாக போப் ஜான்பால் கல்வியியல் கல்லூரி,  அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை ஆணையர் கந்தசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். மண்டல கள விழிப்புணர்வு அலுவலகத்தில் இதுகுறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.