தலைக்கவசத்துக்கு எதிரான அதிமுக எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் உயர் நீதின்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது கட்செவி அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
புதுவையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தான் கட்டாய தலைக்கவச சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் அடம் பிடிப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். மேலும், தொடர்ந்து தலைக்கவசத்தை அணியாமல் அபராதம் செலுத்துவோர்களின் ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும்.
புதுவை பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைக்கவசத்தை உடைத்து நடத்திய போராட்டம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. மத்திய மோட்டார் வாகன சட்டம், நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகும்.
சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளால் நாம் கட்டுப்படத்தப்பட்டுள்ளோம். கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த முதல்வர் தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார் கிரண் பேடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


