புதுச்சேரியில் கல்லூரி மாணவரைத் தாக்கி, மிரட்டல் விடுத்ததாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி சோலை நகர் வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் சுரேன்குமார் (18). சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சனிக்கிழமை இவர் தனது நண்பர்களுடன் 2 இருசக்கர வாகனங்களில் கடலூர் சாலையில் உள்ள திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றனர். இரவில் வீடு திரும்பும்போது, முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் அருகே எதிரே பைக்கில் வந்த கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த அஜித்ராஜ் (19), முகேஷ் (19), ஷரீப் (19) ஆகியோர் ஏன் வேகமாகச் செல்கிறீர்கள் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனராம். தகராறு முற்றியதில், மூவரும் சேர்ந்து சுரேன்குமாரை கையாலும், கட்டையாலும் தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, அஜித்ராஜ், முகேஷ், ஷரீப் ஆகிய மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









