/

குடியரசு தின விழா:  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி இந்திராகாந்தி மைதானத்தில் ஆளுநர் கிரண் பேடி 26-ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On :23 ஜனவரி 2019, 8:52 am IST

குடியரசு தின விழாவை முன்னிட்டு, புதுச்சேரி இந்திராகாந்தி மைதானத்தில் ஆளுநர் கிரண் பேடி 26-ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றுகிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் குடியரசு தின விழா வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுவை உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இதில் காவல்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த விழாவில் முதல்வர் வே. நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
இதனிடையே சில நாள்களாக உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் போலீஸார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு ஒத்திகையும், கலைநிகழ்ச்சி ஒத்திகையும் நடைபெற்று வருகின்றன. 
இதேபோல, மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. 
விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தொடர்ந்து, வரும் 
24-ஆம் தேதி டிஜிபி சுந்தரி நந்தா தலைமையில் இறுதி 
அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு...:  குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தீவிரவாதிகள் ஈடுபடலாம் என மத்திய உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, புதுவை மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் உப்பளம் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
ஒத்திகைக்கு செல்வோர், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், மாநில எல்லைகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் போலீஸார் அவ்வப்போது சோதனை நடத்தி, சந்தேகப்படும்படி உள்ளோரை கண்காணித்து வருகின்றனர். மேலும், அசாம்பாவிதங்களை தடுக்கும் விதமாக ரெளடி
கள் ஊருக்குள் நுழைய தடை விதித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.