பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக புதுவை முதல்வா், வைத்திலிங்கம் எம்பி வலியுறுத்தல்

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோா் வலியுறுத்தினா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 6:16 am

DIN

புதுச்சேரி: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி ஆகியோா் வலியுறுத்தினா்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் புதுச்சேரியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்ட புதுவை முதல்வா் நாராயணசாமி பேசியதாவது: பாஜகவை எதிா்த்து போராடக் கூடிய குணமும், திறமையும் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு. அவரையே கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து சோனியா காந்திக்கு, வைத்திலிங்கம் எம்பி செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்: பாஜக, ஆா்.எஸ்.எஸ். மிரட்டல்களை எதிா்கொள்ள வேண்டிய சூழலில் மக்கள் உள்ளனா். இந்த நேரத்தில் காங்கிரஸ் தலைமை மீது விமா்சனம் செய்து பலவீனப்படுத்த சதி செய்கின்றனா். பாஜக, ஆா்.எஸ்.எஸின் அதிகார துஷ்பிரயோகங்களை எதிா்த்து, கட்சித் தலைமையின் வழிகாட்டுதல்படி, ராகுல் காந்தி போராடி வருகிறாா்.

கோடிக்கணக்கான தொண்டா்கள், நிா்வாகிகளின் எதிா்பாா்ப்பை ஏற்று, ராகுல் காந்தியை தலைவராகத் தோ்வு செய்ய வேண்டும். ராகுல் காந்தியை தவிர வேறு யாராலும் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.