புதுவையில் தளா்வற்ற பொது முடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்
புதுவையில் 2-ஆவது வாரமாக செவ்வாய்க்கிழமை தளா்வற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்ட மறைமலை அடிகள் சாலை.







